search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மாணவி"

    • சுஸ்ருன்னியாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா. இவர் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் அவர் இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் ஜான்ஜசிண்டோ நினைவு இடத்தை பார்வையிட சென்றார். அப்போது அவரை திடீரென மின்னல் தாக்கியது. இதனால் அவர் அருகில் உள்ள குளத்தில் விழுந்தார். இதை பார்த்தவர்கள் சுஸ்ருன்னியாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டது. இதில் அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவி கோமாவில் இருக்கும் தகவல் கிடைத்து இந்தியாவில் இருக்கும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    • நீதிமன்ற விசாரணையின்போது ஜாஸ்மீனின் தாயார் மற்றும் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
    • குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தாரிக்ஜோத் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த ஒரு கொடூரமான கொலை சம்பவம் அனைவரையும், குறிப்பாக இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    இந்தியாவை சேர்ந்த 21-வயது நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர், அவரது முன்னாள் காதலனால் கடத்தப்பட்டு, கிட்டத்தட்ட 650 கி.மீ. காரில் கொண்டு செல்லப்பட்டு, தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் பகுதியில், உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் நீதிமன்ற விசாரணையின்போது வெளிவந்துள்ளன.

    அடிலெய்டு நகரில் வசித்து வந்த ஜாஸ்மீன் கவுர், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங் என்பவரால் கொல்லப்பட்டிருக்கிறார். கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே தாரிக்ஜோத் சிங் தன்னை பின் தொடர்வதாக ஜாஸ்மீன், போலீசில் புகாரளித்திருக்கிறார்.

    தாரிக்ஜோத் சிங் தன்னுடன் வசிப்பவரின் காரில், ஜாஸ்மீன் கவுரை அவரது பணியிடத்திலிருந்து மார்ச் 5, 2021 அன்று கடத்திச் சென்றுள்ளான். அவரை கேபிளால் பிணைத்து காரை கிட்டத்தட்ட 644 கி.மீ. தூரத்திற்கு ஓட்டிச் சென்று, மறுநாள் (மார்ச் 6) அவரது கழுத்தை லேசாக அறுத்ததுடன், ஒரு ஆழமற்ற கல்லறையில் உயிருடன் புதைத்திருக்கிறார்.

    விசாரணையின்போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை குறித்த கொடூரமான விவரங்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை மற்றும் எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதுதான் வெளிச்சத்திற்கு வந்தது.

    நீதிமன்ற விசாரணையின்போது ஜாஸ்மீனின் தாயார் மற்றும் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

    விசாரணையின் ஆரம்பத்தில் தாரிக்ஜோத் சிங் கொலை செய்ததை மறுத்து வந்திருக்கிறார். கவுர் தற்கொலை செய்து கொண்டதாகவும், தாம் உடலை மட்டுமே புதைத்ததாகவும் கூறி வந்தார்.

    ஆனால், 2023 தொடக்கத்தில் விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங், கவுரை புதைத்த இடத்திற்கு அதிகாரிகளை அழைத்துச் சென்றார். அங்கு அதிகாரிகள் கவுரின் காலணிகள், கண்ணாடிகள் மற்றும் பேட்ஜ் ஆகியவற்றை ஒரு தொட்டியில் கண்டெடுத்தனர்.

    ஜாஸ்மீன் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு மைல் எண்ட் பகுதியில் உள்ள கடையில், கையுறைகள், கேபிள் டை மற்றும் ஒரு மண்வெட்டியை சிங் வாங்குவது கண்காணிப்பு கேமிராவில் தெரிய வந்தது.

    விசாரணை நிறைவடைந்த நிலையில், தாரிக்ஜோத் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இந்த கொலை சம்பவம் ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி இந்தியாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவியின் தோழி ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவர் கைது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மாணவி கொந்தம் தேஜஸ்வினி (27). இவர் மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்தார். இவர் அங்கு வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசன்ட் பகுதியில் தனது நண்பர்களுடன் பகிரப்பட்ட அறையில் தங்கி வசித்து வந்தார்.

    இந்நிலையில், தேஜஸ்வினி நேற்று காலை அவரது அறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், இவருடன் இவரது தோழி ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தேஜஸ்வினி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தேஜஸ்வினியின் உறவினர் விஜய் என்பவர், தேஜஸ்வினி தங்கி இருந்த பகிரப்பட்ட அறையில் ஒரு வாரத்திற்கு முன்பு பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் புதிதாக குடியேறினார் என்றும் அவர் தான் தேஜஸ்வினியை கொலை செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து, கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர 23 வயதான இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ×